Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்
-5 %
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் சமூகம் அவர்களின் போராட்டக் குணத்தைக் கண்டு அஞ்சுகிறது. எனவே அவர்களின் நியாயமான குரல்கள்கூட ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றன. சமத்துவம் பேசும் பெண் ஆண்களின் மனதை அதிகம் புண்படுத்துகிறாள். சமத்து..
₹276 ₹290
சத்ரபதி சிவாஜி ரயில்முனை
-5 %
சத்ரபதி சிவாஜி ரயில் முனை போரி பந்தரில் பிரிட்டீஷ் கட்டடக்கலைஞரான எஃப்.டபிள்யூ. ஸ்டீவன்ஸால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கட்டடக் கலைஞர்களால் 1878 88 வருடங்களில் கட்டப்பட்டது. இந்தியா அப்போது பிரிட்டீஷாரால் ஆளப்பட்டு வந்ததால் அது விக்டோரியா ரயில்முனை என்று அழைக்கப்பட்டது. கடற்கரை நகரமான பம்பாய் (மும்பை ..
₹143 ₹150
சந்தி
-5 %
ஒரு தலித் சிறுவனுக்கு அமையும் வாழ்க்கை முறை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. பல வகைகளிலும் சவால்கள் நிறைந்த சூழலில் அவன் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதைக் காட்டும் நாவல் இது. வளரும் பருவத்தில் சாதியச் சூழல் சுமத்தும் நெருக்கடிகளை அந்தச் சிறுவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அனுபவங்கள் சார்ந்த நுட்பமான ..
₹333 ₹350
சந்தியாவின் முத்தம்
-4 %
நினைவுச் சுவடுகளும் வற்றித் தீராத கண்ணீர்த் துளியும் ஆன்ம இசை உயிரூட்டும் காதலும் முத்தத்தின் மூலமாவது சாவைப் பரிசளிக்க வேண்டும் எனக் கோபமுற்றாலும் நிதானம் தவறாத கவனமும் கவிதாவின் கவிதைகளுக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன. கால மயக்கங்களில் சிக்குண்டு இக்கவிதைகள் எழுப்பும் தனிமை புதிது; தொனியு..
₹43 ₹45
சப்தங்கள்
-5 %
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது...
₹133 ₹140
சமனற்ற நீதி | UNEVEN JUSTICE
-5 %
கறுப்பின மக்கள்மீதும் வெள்ளையர் அல்லாதோர்மீதும் அமெரிக்க நீதித்துறையும் அரசும் காட்டுகின்ற ஓடுக்குமுறை தெளிவானது. அதன் இரகசியமான ஒரு பக்கத்தை இந்த நூலில் பார்க்கலாம். அமெரிக்காவின் மக்களாட்சி முறையையும் அதன் குற்றவியல் நீதித்துறையின் நடுநிலைமை பற்றிய மாயைகளையும் இந்நூல் தகர்க்கிறது. ஆழ்ந்த துயரமும் ..
₹404 ₹425
சமீபத்திய காதலி
-5 % Out Of Stock
‘ஆற்றில் மிதந்துகொண்டிருக்கிறது யாரும் விளையாடி முடித்திராத ஒரு விளையாட்டு விளையாட்டைப் பிடித்துக் கரைசேர்க்க ஆற்றில் இறங்கவில்லை யாரும்.’ எஸ். செந்தில்குமாரின் கவிதைகள் புதிய நிலக்காட்சிகளையும், மனக் காட்சிகளையும் பேசுகின்றன. தர்க்கத்தின் மொழியில் சென்று சேர்ந்துவிட இயலாத இடத்துக்கு, இந்தக் கனவுப..
₹38 ₹40
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
-5 %
எம். ஏ. நுஃமான் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கியப் புனைவுகளுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன.  புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி, கலைவாணன், க. நா. சு., கி. ராஜநாராயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வெங்கட் சாமிநா..
₹309 ₹325
சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்
-5 % Out Of Stock
தமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரசோழியத்தையும் ஆந்திர சப்த சிந்தாமணியையும் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணமான சமூக, அரசியல், வரலாற்றுக் கூறுகள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத இலக்கண மர..
₹214 ₹225
சமூகவியலும் இலக்கியமும்
-5 %
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் சமூகவியல் நூல் இது. சமூகவியல் துறையின் தோற்றத்தையும், சமூக மாற்றப் போக்கைக் கருதாத ‘தூய’ சமூகவியலின் போதாமைகளையும் விளக்கி, இலக்கியத்தின் சமூகவியலை இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியரின் தனித்..
₹228 ₹240
சரஸ்வதி காலம்
-5 %
“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.” - சுந்தர ராமசாமி அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்தி..
₹214 ₹225
சரோஜா திறக்கும் உலகம்
-5 %
வாழ்க்கையை நேரடியாக நோக்கி எந்தவிதச் சப்பைக்கட்டுகளோ உபதேசங்களோ இல்லாமல் கதைகள் எழுதுபவர்களில் ஒருவர். மாறிவரும் காலம், மாறாத சிலவற்றுடன் தொடர்ந்து செய்ய நேரிடும் மௌன யுத்தங்களின் சாயல்கள் அவர் கதைகளில் உண்டு. இந்த யுத்தத்தில் உள்ள இழுபறி உறவுகள், இறுக்கங்கள், கோபங்கள், சோகங்கள், ஏய்ப்புகள், அடக்கும..
₹356 ₹375
Showing 517 to 528 of 1239 (104 Pages)